ஆல்பர்ட்டா மாகாண மக்கள், கனடாவுடன் இருப்பதா அல்லது பிரிவதா என்பது தொடர்பில் அடுத்த மாதம் சில முடிவுகள் எடுக்க இருக்கிறார்கள்.
ஆல்பர்ட்டா மாகாணத்தை கனடாவிலிருந்து பிரித்து தனி நாடாக்குவதில் ஆல்பர்ட்டா மாகாண மக்களில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளார்கள்.
இந்நிலையில், கனடா மாகாணம் பிரிவது தொடர்பில் அக்டோபர் மாதம் 19ஆம் திகதி வாக்கெடுப்பு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுவருகிறது.
விடயம் என்னவென்றால், அந்த வாக்கெடுப்பில், ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவதா என்னும் கேள்விகள் நேரடியாக கேட்கப்படப்போவது இல்லை.
மாறாக, ஆல்பர்ட்டா மாகாணம் கனடாவுடன் தொடர்ந்து இணைந்தே இருப்பதா அல்லது பிரிவது தொடர்பில் ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தவேண்டுமா என்னும் கேள்விகள்தான் கேட்கப்பட உள்ளன.
இந்நிலையில், ஆல்பர்ட்டா பிரிவதற்கு ஆதரவளிக்கும் அமைப்பொன்று, வாக்கெடுப்பில் கனடாவிலிருந்து பிரிவது என ஆல்பர்ட்டா மக்கள் முடிவெடுக்கும் பட்சத்தில், ஆல்பர்ட்டாவில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தொடர்பான விடயங்களைக் கூறும் 214 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே ஆல்பர்ட்டா மாகாணம் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது, அப்படியிருக்கும் பட்சத்தில், அது பிரிவதால் எதுவும் நின்றுவிடப்போவதில்லை என்கிறார்கள் ஆதரவாளர்கள்.
ஆனாலும், ராணுவம், ஆல்பர்ட்டாவிலிருந்து கனடாவின் பிற பகுதிகளுக்கு போக்குவரத்து, கடன், மின்சாரம், எரிபொருள் போன்ற விடயங்கள், ஓய்வூதியம், எல்லைகள், சொத்துக்கள் போன்ற விடயங்கள் குறித்து கனடாவுடனும், பூர்வக்குடியினர் உள்ளிட்ட மற்றவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டியிருக்கும் என்கிறார்கள் பிரிவதை ஆதரிப்பவர்கள்.
எதிர்ப்பவர்களோ, பிரிந்தால் பிரிந்ததுதான், அதற்குப் பிறகு பேச்சுவார்த்தையெல்லாம் எடுபடாது என்கிறார்கள். ஆக, என்ன நடக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு மாதத்தில் தெரியலாம்!





Comments are closed, but trackbacks and pingbacks are open.