Niagara பகுதியில் மேலும் புதிய Casino மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் உருவாகுவதற்கான முக்கிய தடையை Ontario அரசு நீக்கியுள்ளது.
Ontario Lottery and Gaming Corporation (OLG) மற்றும் MGE Niagara Entertainment Inc. இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய உடன்பாட்டின்படி, Niagara Gaming Bundle-இன் கீழ் MGE-க்கு இருந்த பிரத்யேக உரிமைகள் நீக்கப்படுகின்றன. இதன்மூலம் புதிய gaming மற்றும் entertainment operators Niagara சந்தைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது Niagara Falls-இல் உள்ள Fallsview Casino Resort மற்றும் Casino Niagara ஆகிய இரு முக்கிய Casino-களையும் MGE தொடர்ந்து OLG சார்பில் இயக்கும். தற்போதைய Casino-களை MGE-யிடமிருந்து மாற்றுவது இந்த அறிவிப்பின் நோக்கம் அல்ல; அதற்கு மேலாக புதிய முதலீடுகளையும் புதிய operators-ஐயும் கொண்டு வருவதற்கே Ontario அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய Casino operators-ஐ தேடும் OLG
புதிய gaming operators-ஐ அடையாளம் காணுவதற்கான procurement process-ஐ 2026ஆம் ஆண்டின் பின்னர் OLG ஆரம்பிக்கவுள்ளது என்று Ontario அரசு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் புதிய Casino-கள் மட்டுமல்லாமல், அவற்றுடன் தொடர்புடைய hotels, restaurants மற்றும் entertainment developments போன்ற புதிய முதலீடுகளும் Niagara பகுதிக்கு வரக்கூடும் என அரசு எதிர்பார்க்கிறது.
Ontario அரசின் இடைக்கால Tourism, Culture and Gaming அமைச்சர் Doug Downey, Niagara ஏற்கனவே Ontario-வின் முக்கியமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதாகவும், அப்பகுதிக்கு மேலும் சுற்றுலாப் பயணிகளையும் முதலீடுகளையும் ஈர்ப்பதற்கான வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் Casino-களுக்கு வருகை
Ontario அரசின் தகவல்களின்படி, Niagara பகுதியில் உள்ள Casino-களுக்கு ஆண்டுதோறும் 5 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் வருகை தருகின்றனர்.
அதேவேளை, இங்குள்ள Casino நடவடிக்கைகள் மூலம் ஆண்டுக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான gaming revenue உருவாகிறது.
13 மில்லியனிலிருந்து 25 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கு
இந்த மாற்றம் Ontario அரசின் பெரிய அளவிலான Destination Niagara Strategy திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
தற்போது Niagara Region ஆண்டுதோறும் 13 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இதனை ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் visitors வரை உயர்த்துவதுடன், Niagara சுற்றுலாத்துறையின் பொருளாதார தாக்கத்தை இரட்டிப்பாக்குவதும் அரசின் இலக்காகும்.
இந்தத் திட்டங்கள் நிறைவேறினால் Ontario-வின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு — GDP-க்கு — ஆண்டுதோறும் கூடுதலாக சுமார் $3 பில்லியன் பங்களிப்பு கிடைக்கக்கூடும் என்று மாகாண அரசு மதிப்பிட்டுள்ளது.
Theme Park உள்ளிட்ட பெரிய திட்டங்களும் பரிசீலனையில்
Casino துறையின் விரிவாக்கத்துடன் மட்டும் Destination Niagara Strategy நிற்கவில்லை.
Niagara பகுதியில் ஒரு புதிய பெரிய அளவிலான theme park உள்ளிட்ட முக்கிய சுற்றுலா attraction ஒன்றை உருவாக்குவதற்கான வாய்ப்புகளையும் Ontario அரசு ஆராய்ந்து வருகிறது.
மேலும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் கலாசாரத் திட்டங்களை விரிவுபடுத்துதல், விமானப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் Niagara-வை சர்வதேச அளவில் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் destination-ஆக மாற்றும் அரசின் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
இதன் ஒரு பகுதியாக Niagara District Airport விரிவாக்கத்திற்கு Ontario அரசு அண்மையில் சுமார் $10 மில்லியன் முதலீட்டை அறிவித்துள்ளது.
புதிய Casino operators தொடர்பான OLG procurement நடைமுறை ஆரம்பிக்கப்பட்ட பின்னர், எத்தனை புதிய Casino-கள் அனுமதிக்கப்படும், அவை எங்கு அமைக்கப்படும், எந்த நிறுவனங்கள் போட்டியிடும் என்பதற்கான மேலதிக விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.