கனடாவின் இணைய வழியிலான உளவு அமைப்பான ‘கமினிகேஷன்ஸ் செக்யூரிட்டி எஸ்டாப்ளிஷ்மென்ட்’ தலைவராக மூத்த அரசு அதிகாரி ஸ்காட் ஜோன்ஸை பிரதமர் மார்க் கார்னி நியமித்துள்ளார்.
தற்போது ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியருக்குப் பதிலாக ஸ்காட் ஜோன்ஸ் இந்தப் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் இதற்கு முன்னர் ‘ஷேர்டு சர்வீசஸ் கனடா’ அமைப்பின் தலைவராகப் பணியாற்றி வந்தார்.
அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இணைய வழியில் வெளிநாட்டு உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், இணைய அச்சுறுத்தல்களிலிருந்து கனடாவைப் பாதுகாப்பதும் சி.எஸ்.இ அமைப்பின் முதன்மைப் பணியாகும்.
ஸ்காட் ஜோன்ஸ் 2018 முதல் 2021 வரை CSE அமைப்பின் கீழ் இயங்கும் ‘கனடியன் சென்டர் ஃபார் சைபர் செக்யூரிட்டி’ அமைப்பின் தலைவராகப் பணியாற்றினார்.
மேலும், 2008 முதல் 2018 வரை இந்த அமைப்பில் பல்வேறு முக்கியப் பதவிகளை அவர் வகித்துள்ளார்.
ஓய்வு பெறவுள்ள கரோலின் சேவியர் கனடா நாட்டுக்கு ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க சேவைகளைப் பாராட்டிப் பிரதமர் மார்க் கார்னி தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.