கனடாவில் 57 பெட்டி நண்டுகளுடன் ஓருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கனடாவின் நோவா ஸ்கோடியாவில் உள்ள மார்க்ரெட்ஸ்வில் பகுதியில், மீன்வளச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா மீன்வளம் மற்றும் பெருங்கடல்கள் துறை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் 18-ஆம் திகதி ஒரு சேமிப்புக் கிடங்கில் மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது, இந்த நபரை வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்த 57 பெட்டி நண்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதிகாரிகள் நடத்திய ஆய்வில், அந்தப் பெட்டிகளில் மொத்தம் 3,311 உயிருள்ள நண்டுகளும், 495 இறந்த நண்டுகளும் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, உயிருடன் இருந்த 3,311 நண்டுகளையும் உடனடியாக கேப் பிரெட்டனில் உள்ள ‘லாப்ஸ்டர் மீன்பிடி மண்டலம் 29’-க்கு பாதுகாப்பாகக் கொண்டு சென்று மீண்டும் கடலிலேயே விட்டனர்.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், தற்போது மேலதிக விவரங்கள் எதையும் வெளியிட முடியாது என்றும் கனடா மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.