Reading Time: < 1 minute

கனடாவிலிருந்து அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் வரை தனது முன்னாள் பெண் சக ஊழியரைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கனேடியர் ஒருவர் மீது அமெரிக்காவில் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tamil Business Directory

நிக்கோலே சபோவ் (Nikolay Sapov) என்பவர், மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் தன்னுடன் பணியாற்றிய பெண்ணை பல ஆண்டுகளாகத் தொடர்ந்து தொடர்புகொண்டு தொந்தரவு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

2026 ஜூன் மாதம் ரொறன்ரோவிலிருந்து டெக்சாஸ் மாநிலத்தின் டல்லாஸ் நகருக்குச் சென்ற அவர், அப்பெண்ணின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு நடமாடியதாகவும், பின்னர் முகமூடி அணிந்து வீட்டின் வாசலுக்கு வந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலிப் புகைப்படங்களையும் அப்பெண்ணுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 22ஆம் திகதி அமெரிக்காவுக்குள் ரயிலில் நுழைந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.