Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தில், செயின்ட் லாரன்ஸ் ஆற்றிலுள்ள Île aux Canards தீவில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான பழைய பீப்பாய் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tamil Business Directory

1942ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாகக் கருதப்படும் இந்தப் பீப்பாயில், இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆபத்தான ஆந்த்ராக்ஸ் (Anthrax) கிருமிகள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

அருகிலுள்ள Grosse Île தீவில் இரண்டாம் உலகப் போரின்போது உயிரியல் ஆயுதங்கள் தொடர்பான இரகசிய ஆராய்ச்சிகள் நடைபெற்றதே இந்த அச்சத்திற்குக் காரணமாகும்.

இதையடுத்து, அக்டோபர் 27ஆம் திகதி வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் அபாயகரமான பொருட்களைக் கையாளும் சிறப்புக் குழுவினர் பீப்பாயைப் பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

நவம்பர் 4ஆம் திகதி வெளியான ஆய்வு முடிவுகளின்படி, பீப்பாயில் ஆபத்தான ஆந்த்ராக்ஸ் கிருமிகள் இல்லை என்றும், அதிலுள்ள திரவத்தால் பொதுமக்களுக்கு ஆபத்து இல்லை என்றும் கியூபெக் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இருப்பினும், பீப்பாயில் உள்ள திரவம் என்ன, அது எங்கிருந்து வந்தது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. மேலதிக ஆய்வுகளை கியூபெக் சுற்றுச்சூழல் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.