Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வாடிக்கையாளர்களின் அடமானக் கடன் விண்ணப்பங்களில் போலியான மற்றும் தவறான தகவல்களைச் சமர்ப்பித்த குற்றத்திற்காக, முன்னாள் அடமானத் தரகர் கூர்ஷெர் சிங் பெயின்ஸ் தொழிலில் ஈடுபட ஆயுட்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பிரிட்டிஷ் கொலம்பியா நிதிச் சேவைகள் ஆணையம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் கையாண்ட அனைத்து விண்ணப்பங்களிலுமே முறைகேடுகள் செய்தது அம்பலமாகியுள்ளது.

வாடிக்கையாளர் வாங்க முயன்ற வீடு என்ற தகவலைக் கடன் வழங்கும் வங்கிக்குத் தெரிவிக்காமல் பெயின்ஸ் மறைத்துள்ளார். வங்கி ஆய்வில் இது தெரியவந்ததும் கடன் நிராகரிக்கப்பட்டது.

இதனால், ஒப்பந்தக் காலத்தை நீட்டிக்க வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணமாக 5,000 டொலா் வழங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர்.

வாடிக்கையாளர்களை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல், மூன்றாம் நபர் கொடுத்த தகவல்களை அப்படியே சரிபார்க்காமல் வங்கிக்கு அனுப்பியதை பெயின்ஸ் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 2022 மே முதல் 2024 ஏப்ரல் வரை அவர் கையாண்ட 8 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

அவை அனைத்திலும் போலியான தகவல்கள் இருந்தது கண்டறியப்பட்டது: 5 கோப்புகளில் வாடிக்கையாளர்களின் வருமானம் மற்றும் சொத்து மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காகப் போலி வரி ஆவணங்கள் இணைக்கப்பட்டிருந்தன.

சர்ரே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அடமான விண்ணப்பத்தில் இணைக்கப்பட்ட வரி ஆவணங்கள் பற்றி அந்த வாடிக்கையாளரிடம் கேட்டபோது, “எனக்கு இந்த ஆவணங்கள் பற்றி எதுவுமே தெரியாது; பெயின்ஸை நான் நேரில் சந்தித்ததே இல்லை” எனக் கூறி அதிர்ச்சியளித்தார்.

ஒரு சொத்தின் மீது ஏற்கனவே முதல் அடமானக் கடன் இருப்பதை மறைத்து, இரண்டாவது கடனுக்கு விண்ணப்பித்தது உட்பட பல தவறான தகவல்களை வங்கிகளுக்கு அளித்திருந்தார்.

பொதுமக்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டது, அடமானத் தரகர்கள் சட்டத்தை மீறியது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றங்களை ஒப்புக்கொண்ட பெயின்ஸ், டிசம்பர் 2, 2025 அன்று தனது உரிமத்தை ரத்து செய்தார்.

இனிமேல் அவர் பி.சி. மாநிலத்தில் அடமானத் தரகராகப் பணியாற்றவோ, உரிமத்திற்கு விண்ணப்பிக்கவோ முடியாது. 25,000 டொலர் நிர்வாக அபராதம் மற்றும் 5,000 டெலார் விசாரணைச் செலவு என மொத்தம் 30,000 டொலர் தொகையை அடுத்த மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.