Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாநிலத்தில் உள்ள ஹமில்டன் நகரில் இன்று அதிகாலை கத்திக் குத்து காயங்களுடன் மீட்கப்பட்ட 21 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

ஹமில்டன் காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிகாலை 2:30 மணியளவில் மெயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஃபிரிட் ஸ்ட்ரீட் சந்திப்பிற்கு அருகே டாக்ஸி ஓட்டுநர் ஒருவரால் இந்த இளைஞர் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்ஸி ஓட்டுநர் தகவலளித்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர் படுகாயமடைந்த இளைஞரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர், மெயின் ஸ்ட்ரீட்டில் மீட்கப்படுவதற்கு முன்பு ‘கிங் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் பாரடைஸ் ரோடு நார்த்’ பகுதிக்கு அருகே மற்றொரு தரப்புடன் தகராறில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் அல்லது அதற்கு முன்பாக நடந்த தகராறைக் கண்ட சாட்சிகள் யாரேனும் இருந்தால், உடனடியாக புலனாய்வு அதிகாரி அலேக்ஸ் பக்கை (905-546-4123) தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், இன்று அதிகாலை 2:00 மணி முதல் 2:45 மணிக்குள் அப்பகுதியில் பயணித்த வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் ‘டாஷ்கேம்’ அல்லது பிற வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து, அது தொடர்பான தகவல்கள் ஏதேனும் இருந்தால் பொலிஸாரிடம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.