கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு மறுசீரமைக்கப்படவேண்டும் என ராயல் கனடா வங்கி தெரிவித்துள்ளது.
கனடாவின் புலம்பெயர்தல் அமைப்பு வரலாற்று ரீதியாக நம்பகத்தன்மை கொண்டதாக இருந்து வந்துள்ளது, ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அதன் நம்பகத்தன்மை குறைந்துள்ளது என்று கூறியுள்ளது ராயல் கனடா வங்கி.
ராயல் கனடா வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில், நாட்டின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என்று கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் கனடாவுக்கு புலம்பெயர்ந்தவர்கள் எண்ணிக்கை, மூன்று மில்லியன். இது ஏறக்குறைய ஒரு தசாப்த கால புலம்பெயர்தலுக்குச் சமம் என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
ஆனால், 2022ஆம் ஆண்டுக்கும் 2024ஆம் ஆண்டுக்கும் இடையில் புலம்பெயர்தல் பெருமளவில் அதிகரித்ததைத் தொடர்ந்து, அடிக்கடி விதி மாற்றங்கள் செய்யப்பட்டன.
அத்துடன், வலுவிழந்த புள்ளிகள் முறையிலான புலம்பெயர்தல் அமைப்பு மற்றும் திறன்கள் மற்றும் அனுபவத்தின் மீதான முக்கியத்துவத்தைக் குறைத்ததாலும், ஒரு நிலையற்ற சூழல் உருவானது.
அதன் காரணமாக, 2025ஆம் ஆண்டு, மக்கள்தொகையில் ஒரு அரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இத்தகைய விடயங்கள், கனடாவின் பொருளாதாரத்திற்கு நல்லதல்ல என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு வரம்புகள் விதிக்கப்பட்டது மற்றும் குறைவான புலம்பெயர்தல் இலக்குகளை நியமித்ததன் மூலம் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் பின்னர் கட்டுப்படுத்தப்பட்டது.
விடயம் என்னவென்றால், இவை அதிர்ச்சி அலைகளுக்கும் வழிவகுத்தன என்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
உதாரணமாக, 2024 முதல் 2026 வரையில் 25க்கும் மேற்பட்ட விதி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அவை, சர்வதேச மாணவர்களைப் பாதித்ததால், உயர்கல்வித் துறையில் 20,000க்கும் மேற்பட்ட வேலை இழப்புகள் ஏற்பட்டன.
ஒவ்வொரு மாதமும் 25,000க்கும் மேற்பட்ட கனேடியர்கள் ஓய்வு பெற்றுக்கொண்டிருக்கும் நிலையிலும், பிறப்புகளை விட இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நேரத்திலும், இப்படி ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது என்கிறது அந்த அறிக்கை.
புலம்பெயர்தல் இல்லாவிட்டால், அடுத்த நூற்றாண்டின் துவக்கத்தில் கனடாவின் மக்கள்தொகை பாதியாகக் குறைந்துவிடும் என எச்சரிக்கிறது ராயல் கனடா வங்கியின் அறிக்கை.
ஆக, கனடாவின் புலம்பெயர்தல் யுக்தி அதன் கூர்மையை இழந்துவிட்டதால், அமெரிக்காவைச் சார்ந்திருப்பதைக் குறைத்து புதிய பொருளாதார இலக்குகளை அடைய கனடா அரசு முற்படும் நிலையில், புலம்பெயர்தல் அமைப்பின் மீதான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டியது அவசியம் என்கிறது அந்த அறிக்கை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.