பேக் செய்யப்பட்ட லேபிளில் முட்டை சேர்க்கப்பட்ட விபரம் விடுபட்டதால், கனடாவில் விற்பனையாகும் பிரபல ‘காம்ப்ளிமென்ட்ஸ்’ பிராண்டின் சிக்கன் பர்கர்களை அதன் உற்பத்தியாளரான ‘லெட்பெட்டர் ஃபுட்ஸ்’ ஆகஸ்ட் 27 அன்று அவசரமாகத் திரும்பப் பெற்றுள்ளது.
முட்டை ஒவ்வாமை உள்ளவர்களுக்கு இது கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவு ஆய்வு முகவர் நிறுவனம் இந்தச் சம்பவத்தை “Class 2” (வகுப்பு 2) திரும்பப் பெறுதலாக வகைப்படுத்தியுள்ளது.
இந்த உணவை உட்கொள்வதால் தற்காலிகமான அல்லது உயிருக்கு ஆபத்தில்லாத மிதமான சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் உணவு மற்றும் மருந்து விதிகளின்படி, முன்-பேக் செய்யப்பட்ட உணவுகளின் லேபிளில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் அதிக அளவிலிருந்து குறைந்த அளவு வரை வரிசையாகக் குறிப்பிடப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட இந்தத் தயாரிப்பைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ, பரிமாறவோ அல்லது விநியோகிக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை எத்தனை பாக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன என்ற விவரமோ, அல்லது இதனால் வாடிக்கையாளர்கள் யாரேனும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்த தகவலோ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.