Reading Time: < 1 minute

கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில், உணவு வங்கிகள் வெறுமையாக உள்ளதால் அவற்றின் நிர்வாகிகள் கவலையடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

Tamil Business Directory

ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள உணவு வங்கிகளின் சேமிப்பகங்களில், உணவு மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தட்டுகள் உயரமாக அடுக்கப்பட வேண்டிய இடங்களில், அலமாரிகள் காலியாக இருக்கின்றன.

வழக்கமாக, ஸ்பான்சர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று அவற்றை கிளை உணவு வங்கிகளுக்கு அனுப்புவோம்.

ஆனால், இப்போது சேமிப்பகங்கள் வெறுமையாக உள்ளன என்கிறார் Food Banks Alberta அமைப்பின் எக்சிகியூட்டிவ் இயக்குநரான டேரில் பர்ரி.

இந்த அமைப்பு, ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள 112 கிளை உணவு வங்கிகளுக்கு பொருட்களை அனுப்புகிறது.

2025ஆம் ஆண்டு, இந்த அமைப்பு 3.36 மில்லியன் பவுண்டுகள் அளவுடைய பொருட்களை மாகாணம் முழுவதற்கும் அனுப்பியது.

இந்த ஆண்டிலோ, தேவை அதிகரித்துள்ளதால், ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே முந்தைய ஆண்டு அனுப்பிய அளவில் 90 சதவிகிதத்தை அனுப்பியாயிற்று.

விடயம் என்னவென்றால், பண்டிகை நாட்கள் நெருங்கிவரும் நிலையில், சேமிப்பகங்கள் காலியாக உள்ளதால், என்ன செய்வதென தெரியாமல் கவலையடைந்துள்ளனர் உணவு வங்கிகளின் நிர்வாகிகள்.

அதாவது, 2025ஆம் ஆண்டு நிலவரப்படி, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 210,000 பேர் உணவு வங்கிகளுக்கு வந்து உணவுப்பொருட்களைப் பெற்றுச் சென்றுள்ளார்கள்.

இது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது 22 சதவிகிதம் அதிகம்.

அப்படியானால், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களிலேயே ஏராளமானோர் உனவு வங்கிகளைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

அதாவது, தங்கள் அன்றாடத் தேவைகளுக்காக உணவு வங்கிகளை நாடும் மக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது இதன் பொருள் ஆகும்!

Comments are closed, but trackbacks and pingbacks are open.