Reading Time: < 1 minute

கனடாவில் நகர மேயர் ஓருவர் மதுபான போத்தல்களை திருடிச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

மொன்றியல் நகருக்கு வடக்கே அமைந்துள்ள செயிண்ட்-ஆன்-டெஸ்-லேக்ஸ் நகரத்தின் மேயர் ஜான் டால்ஸெல், மதுபானக் கடையொன்றில் பணம் செலுத்தாமல் பகார்டி ரம் போத்தல்களை திருடிச் சென்றதாக ஐந்து திருட்டுக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார்.

முன்னாள் மொன்றியல் பொலிஸ் அதிகாரியான மேயர் ஜான் டால்ஸெல் மீது, 5,000 டாலருக்கு உட்பட்ட பெறுமதியுடைய பொருட்களை திருடியதாக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

2025 ஆம் ஆண்டு அக்டோபர் 28, நவம்பர் 11, நவம்பர் 22, நவம்பர் 29 மற்றும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 ஆகிய திகதிகளில் இத்திருட்டுகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

நெடுஞ்சாலை 15 இற்கு அருகில் உள்ள மதுபானக் கடையில் ஒவ்வொரு முறையும் அவர் ஒவ்வொரு பகார்டி ரம் போத்தலை திருடிச் சென்றதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள டால்ஸெல், ஜனவரி 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளார். இவர் 1990 முதல் 1997 வரை மொன்றியல் நகர்ப்புற சமூக பொலிஸ் சேவையின் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். 1986 ஆம் ஆண்டு கனடிய கவர்னர் ஜெனரலிடம் ‘பொலிஸ் மாதிரி சேவைப் பதக்கம்’ பெற்றுள்ளார். 2005 இல் தேசிய பாதுகாப்பு தொடர்பான கனடிய ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார். 2024 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று நகரசபை உறுப்பினரான இவர், 2025 ஆம் ஆண்டு போட்டியின்றி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.