Reading Time: < 1 minute

டொராண்டோவிற்கு வடக்கே வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் இருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் யோர்க் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

ஜேன் தெரு மற்றும் டேவிஸ் டிரைவ் சந்திப்புப் பகுதியில் அதிகாலை 4:30 மணியளவில் இந்த விபத்து நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் மூன்று வாகனங்கள் மோதியுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துக்கான காரணத்தைக் கண்டறியும் பணியில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக, டேவிஸ் டிரைவ் பகுதி நெடுஞ்சாலை 400 முதல் கீல் தெரு வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.