Reading Time: < 1 minute

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பிரபல இந்திய நடிகரும் நகைச்சுவையாளருமான கபில் ஷர்மாவுக்குச் சொந்தமான உணவகம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

சர்ரே நகரில் அமைந்துள்ள Kap’s Cafe உணவகம், 2025 ஜூலை மாதம் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட சில நாட்களிலேயே ஜூலை 10ஆம் திகதி முதலாவது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 7 மற்றும் அக்டோபர் 16ஆம் திகதிகளிலும் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்தத் தாக்குதல்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்நிலையில், 2025 அக்டோபர் 16ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தொடர்பாக, பர்தீப் சிங் (22), சவீர் கான் (22) ஆகிய இருவரையும் நவம்பர் 1, 2026 அன்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும், அக்டோபர் 12ஆம் திகதி சர்ரேயிலுள்ள வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பெண் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாகவும் இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதல்கள் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரும் தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.