ஒன்ராறியோவின் ஹாமில்டன் நகரில் விமானப் படை கேடட்களின் மேற்பார்வையாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 1ஆம் திகதி, நினைவு தினத்தையொட்டி பொப்பி மலர்களை விநியோகித்துக் கொண்டிருந்த இளம் கேடட்களின் காதுகளுக்கு அருகில் இரண்டு சிறுவர்கள் அதிக சத்தமுள்ள ஏர் ஹார்னை ஒலிக்கச் செய்துள்ளனர்.
இதனைத் தட்டிக்கேட்ட 59 வயதான கேடட் அதிகாரி கென்னத் குன்கெல் (Kenneth Kunkel) தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்த அவர், முதுகெலும்பு அறுவைச் சிகிச்சைக்குப் பின்னரும் நடக்க முடியாத நிலையில் இருப்பதாகக் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக 12 வயதுச் சிறுவனும் 48 வயதுப் பெண்ணும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
நவம்பர் 9ஆம் திகதி செய்தியாளர்களிடம் பேசிய டக் ஃபோர்ட், இச்செயலை மிகவும் அருவருப்பானது எனக் கண்டித்ததுடன், சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் வெட்கப்பட வேண்டும் என்றும், தங்கள் பிள்ளைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் கடுமையாகத் தெரிவித்தார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.