கனடாவின் ஒன்டாரியோ மாகாணம், தண்டர் பே சீர்திருத்த மையத்தில் இருந்து தப்பியோடிய 65 வயது கைதியைத் தண்டர் பே காவல்துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்துள்ளனர்.
சிறையிலிருந்து தப்பிய கைதி ஆந்தனி பேட்ரிக் என அடையாளம் காணப்பட்டார்.
ஜூலை 24ம் திகத சிறையிலிருந்து தப்பியதாகத் தகவல் வெளியான நிலையில், தகவல் வெளியான சுமார் 9½ மணி நேரத்தில் காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
சிறை நிர்வாகம் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
தேடுதல் வேட்டையின் போது, நகரின் தெற்குப் பகுதி மற்றும் நெடுஞ்சாலை 61 வழித்தடத்தில் பயணிக்கும் வாகன சாரதிகள், அந்நியர்களுக்கு வாகனம் நிறுத்த வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர்.
கைதியைக் கண்டால் நேரடியாக அணுக வேண்டாம் எனவும், உடனடியாக 911 அவசர எண்ணிற்குத் தொடர்பு கொள்ளுமாறும் காவல்துறை கேட்டுக்கொண்டது.
இந்தத் தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையில் ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையும் இணைந்து செயல்பட்டது.
எனினும், கைதி ஃபிரிஸ்செல் எங்கு வைத்துக் கைது செய்யப்பட்டார், அவர் சிறையிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான மேலதிக விவரங்களைக் காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.