பிரித்தானியா தலைமையிலான ‘கூட்டுப் படைப் பிரிவில்’ முழுநேர உறுப்பினராக இணைவதற்கு கனடா உத்தியோகபூர்வமாக விண்ணப்பித்துள்ளதாகவும், இதற்கு பிரித்தானியா தனது ஆதரவை வழங்கியுள்ளதாகவும் கனடா பிரதமர் மார்க் கர்னி தெரிவித்துள்ளார்.
அவசர காலங்களில் விரைவாகச் செயற்படும் நோக்கில் 10 நேட்டோ நட்பு நாடுகளைக் கொண்டு 2014 ஆம் ஆண்டு இந்த இராணுவக் கூட்டணி உருவாக்கப்பட்டது.
கனடிய இராணுவம் இதுவரை இந்த கூட்டுப் படையின் பல்தேசியப் பயிற்சிகளில் மட்டுமே பங்கேற்று வந்துள்ள நிலையில், தற்போது நிரந்தர உறுப்பினராக இணைய விண்ணப்பித்துள்ளது.
கியர் ஸ்டார்மர் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, பிரித்தானிய பிரதமராகப் பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாமை , கனடா பிரதமர் மார்க் கர்னி புதன்கிழமை முதன்முறையாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பிரித்தானியாவும் கனடாவும் தங்களது பாதுகாப்பு நிதி சார்ந்த திட்டங்களை ஒன்றிணைத்து ஒரு கூட்டு அமைப்பை உருவாக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இவ்விரு திட்டங்களையும் ஒன்றிணைப்பது தொடர்பான இறுதி முடிவு இந்த வாரக் கூட்டங்களில் உடனடியாக வெளிவராவிட்டாலும், விரைவில் உடன்பாடு எட்டப்படும் என்பதில் கனடா அரசு உறுதியான நம்பிக்கையுடன் உள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.