கனடாவின் வின்ஸர் நகரில் உள்ள பாடசாலையொன்றுக்கு அருகில் குண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
‘வின்சென்ட் மாஸ்ஸே இடைநிலைப் பாடசாலைக்கு’ அருகில் உள்ள லிபர்ட்டி வீதியின் 1750-1800 பகுதிக்கு பொலிஸார் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள அதிகாரிகள், குறித்த குண்டு அச்சுறுத்தல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருவதால் மேலதிக கருத்துக்களை வழங்க முடியாது என ‘கிரேட்டர் எசெக்ஸ் கவுண்டி மாவட்ட பாடசாலைச் சபை’ தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பாடசாலை நிர்வாகமும் சபை அதிகாரிகளும் முறைப்படி அறிவிப்பார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் பாடசாலையின் அன்றாட செயல்பாடுகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.