Reading Time: < 1 minute

நேபாளம் மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் கட்டிடங்கள், பாலங்கள் மற்றும் சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு பேரழிவு ஏற்பட்டுள்ளது.

Tamil Business Directory

போதேகோசி ஆற்றுப் பகுதியில் பேரிரைச்சலுடன் சீறிப் பாய்ந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் அடித்துச் செல்லப்பட்ட பயங்கரக் காட்சிகள் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் 24 கனடியர்கள் காணாமல் போயுள்ளதாக நேபாள சுற்றுலா வாரியம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் காணாமல் போயுள்ளனர்.

இந்த பேரழிவு குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கனடா பிரதமர் மார்க் கார்னி நேபாளத்தின் போதேகோசி ஆற்றுப் பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளம் மிகவும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது என கனடிய பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

துயரத்தில் இருக்கும் மக்கள், அன்பானவர்களை இழந்தவர்கள் மற்றும் உறவுகளின் தகவல்களுக்காகக் காத்திருப்பவர்கள் அனைவருக்கும் கனடியர்களின் எண்ணங்கள் துணையாக இருக்கும். எங்களது அரசாங்கம் இந்தச் சூழ்நிலையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் வெளியுறவுத் துறை தூதரக அதிகாரிகள் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட கனடியர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தால் கனடாவில் வாழும் நேபாள மற்றும் திபெத்திய சமூகத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.