Reading Time: < 1 minute

ரொறன்ரோ நகரில் நடைபெற்ற பிரபலமான Salsa on St. Clair திருவிழாவில் இருவர் உயிரிழந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறை தெரிவித்துள்ளது.

Tamil Business Directory

கடந்த ஜூலை 11ஆம் திகதி இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, திருவிழாவில் சுமார் 13,000 பேர் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் ஏழு பேர் காயமடைந்தனர். அவர்களில் 25 வயதான Shaquan Quashie மற்றும் 20 வயதான Cesar Vernaza ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவத்தைத் தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையின் போது, சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகளும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சந்தேக நபர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக ரொறன்ரோ காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கைது செய்யப்பட்டவர்களின் பெயர்கள் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.