Reading Time: < 1 minute

இலங்கை வானொலியின் மூத்த நாடகக் கலைஞரும், திரைப்பட மற்றும் மேடை நடிகையுமான திருமதி சுப்புலட்சுமி காசிநாதன் அவர்கள் தனது 84ஆவது வயதில் கனடாவில் காலமானார்.

Tamil Business Directory

ரொறன்ரோ, ஸ்கார்பரோவில் உள்ள Scarborough General Hospital மருத்துவமனையில் இன்று (நவம்பர் 10) மாலை 4.35 மணியளவில் அவர் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், தனது இரு புதல்விகள் மற்றும் உறவினர்கள் சூழ்ந்திருக்க அமைதியாக உயிர்நீத்தார்.

கடந்த நவம்பர் 1ஆம் திகதியே அவர் தனது 84ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த சுப்புலட்சுமி காசிநாதன் அவர்கள், பிரபல வானொலி, திரைப்பட மற்றும் மேடை நடிகரான இராமேஸ்வரம் காசிநாதன் அவர்களின் துணைவியாவார். அவரது கணவர் காசிநாதன் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் காலமானார்.

இலங்கை வானொலி நாடகங்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம்பிடித்த சுப்புலட்சுமி அவர்கள், புகழ்பெற்ற நடிகமணி வி.வி. வைரமுத்து அவர்களின் மரபுவழி நாடகங்களிலும் நடித்து தனது சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர்.

தமிழ் வானொலி, திரைப்பட மற்றும் நாடகக் கலைத்துறையில் தனக்கென ஓர் அடையாளத்தைப் பதித்த அவரது மறைவு, தமிழ் கலை உலகிற்கு பேரிழப்பாகும்.

மறைந்த மூத்த கலைஞர் திருமதி சுப்புலட்சுமி காசிநாதன் அவர்களுக்கு TorontoTamil.com தனது ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையையும் தெரிவித்துக்கொள்கிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.