Reading Time: < 1 minute

2027ஆம் ஆண்டில் உலகில் பயணிகளுக்கு மிகவும் பாதுகாப்பான நாடாக கனடா தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Tamil Business Directory

பயணக் காப்புறுதி நிறுவனமான Berkshire Hathaway Travel Protection (BHTP) வெளியிட்டுள்ள வருடாந்த ஆய்வறிக்கையில் கனடா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த கனடா, நான்கு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இப்பட்டியலில் நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், அவுஸ்திரேலியா மூன்றாவது இடத்தையும், ஐஸ்லாந்து நான்காவது இடத்தையும், ஜப்பான் ஐந்தாவது இடத்தையும் பெற்றுள்ளன.

வன்முறைக் குற்றங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், போக்குவரத்துப் பாதுகாப்பு, சுகாதார வசதிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பெண்கள், LGBTQIA+ பயணிகள் மற்றும் நிற அடிப்படையில் சிறுபான்மையினராகக் கருதப்படும் பயணிகளுக்கான பாதுகாப்பிலும் கனடா முதலிடத்தைப் பெற்றுள்ளது.

மேலும், உலகின் பாதுகாப்பான சுற்றுலா நகரங்கள் பட்டியலில் கனடாவின் மொன்றியல் நகரம் முதலிடத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.