கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் தெற்குப் பகுதியில் வீசிய கடும் இடியுடன் கூடிய புயலின்போது, இரு மலையேற்ற வீரர்கள் ஆபத்தான நிலையில் சிக்கியுள்ளனர்.
சைப்பிரஸ் பார்க் பகுதியில் உள்ள மெக்னிசா மெடோவ்ஸ் அருகே கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர்.
அந்த நேரத்தில் மாகாணம் முழுவதும் மழைப்பொழிவு திடீரென அதிகரித்ததுடன், 7,000-க்கும் மேற்பட்ட மின்னல் தாக்குதல்கள் பதிவாகியிருந்தன.
கடும் காற்று மற்றும் மழை காரணமாக அவர்களின் கூடாரம் சேதமடைந்து, மழைநீர் தடுப்பு உறை கிழிந்ததாக தெரிவித்துள்ளது.
இதனால் இருவரின் ஆடைகள் மற்றும் உபகரணங்கள் முழுமையாக நனைந்ததுடன், இரவு முழுவதும் குளிரான ஈரமான சூழலில் அவர்கள் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
அடுத்த நாள் காலை சுமார் 11.40 மணியளவில் மீட்புக் குழுவுக்கு அழைப்பு கிடைத்தது. அதற்குள் இருவரும் பாதுகாப்புக்காக அவசரகால தங்குமிடத்தை அடைந்திருந்தனர்.
அங்கு இருந்த மற்றொரு குழுவினர், உடல் வெப்பநிலை குறைந்த நிலையில் இருந்த இருவருக்கும் உதவி செய்து 911 அவசர சேவையை அழைத்துள்ளனர்.
குறைந்த மேக மட்டம் மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக அந்தப் பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் செல்வது சாத்தியமாகவில்லை.
எனவே, மலையேற்றத்தைத் திட்டமிடும்போது பயணிக்கத் திட்டமிட்டுள்ள நாளின் வானிலையை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அதற்கு முந்தைய மற்றும் அடுத்த நாட்களின் வானிலை நிலவரங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.