Reading Time: < 1 minute

கனடாவின் நியூஃபவுண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரின் தலைநகரான செயின்ட் ஜான்ஸ் நகருக்கு அருகே, நீரில் தரையிறங்க முயன்ற சிறிய விமானம் ஒன்று காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Tamil Business Directory

மேர்லின் ஜீ.ரீ. ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம், செயின்ட் ஜான்ஸ் நகரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள பெடிஸ் பொன்ட் ஏரியில் தரையிறங்க முயன்றபோது திடீரென மின்சக்தியை இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதையடுத்து, சனிக்கிழமை இரவு சுமார் 7 மணியளவில் விமானம் ஏரிக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் விழுந்துள்ளது.

விமானத்தில் பயணித்த இரு ஆண்களும் மீட்புப் படையினர் சம்பவ இடத்தை அடையும் முன்னரே விமானத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியேறியிருந்தனர்.

அவர்களில் ஒருவர் காட்டுப் பகுதியிலிருந்து நடந்து பிரதான வீதியை அடைந்த நிலையில், அங்கு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருந்தது.

மற்றொருவரை மீட்க ஹெலிகொப்டரின் உதவி தேவைப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்களுக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்புச் சபைவிசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.