கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிரேஸ்பிரிட்ஜ் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கஞ்சா உற்பத்தி மையம் தொடர்பான பல மாத கால விசாரணை நிறைவுக்கு வந்துள்ளதாக ஒண்டாரியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேஸ்பிரிட்ஜில் உள்ள லிட்டில் ரோடு பகுதியில் சட்டவிரோத கஞ்சா தோட்டம் இயங்கி வருவதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், கடந்த வசந்த காலத்தில் பொலிஸார் விசாரணையைத் தொடங்கினர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 16ம் திகதி பொலிஸார் மற்றும் அரசு நிறுவனங்களின் உதவியுடன் அந்த இடத்தில் பொலிஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனை ஆணைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அங்கு வளர்க்கப்பட்டு வந்த 4,000-க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் கஞ்சா சாகுபடிக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இந்த விசாரணை நடவடிக்கையின் முடிவில், சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் நார்த் யார்க் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.