Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட 51 வயதுடைய சுஷ்மிதா பாஸ்கரன், வனப்பகுதி ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர் மனநல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tamil Business Directory

கியூபெக் மாகாணத்தின் Lévis நகரில் வசித்த சுஷ்மிதா பாஸ்கரன், கடந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி காணாமல் போனதாக பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கியூபெக் மாகாணப் பொலிஸாரும் Lévis நகரப் பொலிஸாரும் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையின்போது Lévis பகுதியிலுள்ள வனப்பகுதி ஒன்றில் பெண்ணொருவரின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் மேற்கொள்ளப்பட்ட அடையாளப் பரிசோதனையில், கண்டெடுக்கப்பட்ட உடல் காணாமல் போன சுஷ்மிதா பாஸ்கரனுடையது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பில் 61 வயதுடைய மார்ட்டின் கேரியர் (Martin Carrier) என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட மார்ட்டின் கேரியர் மனநல மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படவுள்ளார். அவருக்கு ஏதேனும் மனநலப் பாதிப்பு உள்ளதா, சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நேரத்தில் தனது செயல்களின் தன்மையையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளும் மனநிலையில் அவர் இருந்தாரா என்பன இந்த மதிப்பீட்டின் மூலம் ஆராயப்படவுள்ளன.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.