கனடாவின் மொன்றியல்-பியர் எலியட் ட்ரூடோ சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் பகுதியில் வீசிய விசித்திரமான துர்நாற்றம் காரணமாக, புதன்கிழமை காலை அமெரிக்காவிற்கான அனைத்து விமான சேவைகளும் திடீரென ரத்து செய்யப்பட்டன.
கட்டட வேலைகளுக்கானப் பொருட்களில் இருந்து இந்த துர்நாற்றம் வீசியதை அடுத்து, அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் பிரிவு தனது பரிசோதனைப் பணிகளைத் தற்காலிகமாகப் நிறுத்தி வைத்தது.
இதேவேளை, துர்நாற்றம் வீசியதற்கான காரணம் கண்டறியப்பட்டு விட்டதாக மொன்றியல் விமான நிலைய ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், எல்லைப் பாதுகாப்புப் பணிகள் சீரடையும் வரை பயணிகள் தங்களது விமானங்களின் நிலவரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் உறுதிசெய்த பின்னரே விமான நிலையத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அமெரிக்கச் சுங்கப் பரிசோதனை தொடர்பான கூடுதல் சந்தேகங்களுக்கு பயணிகள், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளைத் தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.