தனது வீட்டிற்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுத்தால், ஒரு நொடியும் தயங்காமல் துப்பாக்கியைப் பயன்படுத்துவேன் என ஒன்ராறியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
டொராண்டோவின் காசா லோமா பகுதியில் கடந்த நவம்பர் 25ஆம் திகதி இடம்பெற்ற வீடு புகுந்து தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில், 39 வயதான இசைக்கலைஞர் மைக்கேல் எக்கர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து குயின்ஸ் பார்க்கில் ஊடகவியலாளர்களிடம் பேசிய டக் ஃபோர்ட், பொதுமக்கள் தங்களையும் தமது குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் கனடாவின் குற்றவியல் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே, ஃபோர்டின் கருத்துக்கு ஒன்ராறியோ எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்களை ஆயுதம் ஏந்துமாறு ஊக்குவிப்பதற்குப் பதிலாக, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மாரிட் ஸ்டைல்ஸ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களின்போது உடனடியாக 911 அவசர தொலைபேசி இலக்கத்தை அழைத்து, பொலிஸாரைத் தொடர்புகொள்வதே சிறந்தது என பசுமைக் கட்சியின் தலைவர் மைக் ஷ்ரைனர் தெரிவித்துள்ளார். டொராண்டோ பொலிஸாரும் இதே அறிவுறுத்த





Comments are closed, but trackbacks and pingbacks are open.