Reading Time: < 1 minute

கனடாவின் ஒட்டாவா நகரிலுள்ள ‘ஹைவே 417’ நெடுஞ்சாலையில், தானியங்கி வாகனமொன்றின் சாரதி இருக்கையில் உறங்கிக்கொண்டிருந்த சாரதி ஒருவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Tamil Business Directory

ஒன்ராறியோ மாகாண பொலிஸார் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரத்தில், குறித்த நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்தின் சாரதி, வாகனத்தைச் செலுத்தியவாறு உறங்கிக்கொண்டிருந்ததைப் பொலிஸ் அதிகாரிகள் அவதானித்துள்ளதாக X சமூக வலைத்தளத்தில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உங்கள் வாகனத்தில் தானியங்கி வசதி இருந்தாலும், சாரதி இருக்கையில் அமர்ந்திருக்கும் போது மிகுந்த அவதானத்துடனும் கவனத்துடனும் செயற்படுவது சாரதிகளின் கட்டாயக் கடமையாகும் என்பதை பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் குறித்த சாரதிக்கு எதிராக ‘கவனயீனமாக வாகனம் செலுத்தியமை’ என்ற குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில், 490 டொலர்கள் அபராதமும், சாரதி அனுமதிப்பத்திரத்தில் ஆறு குறைப்புப் புள்ளிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.