Reading Time: < 1 minute

கனடாவில் நடைபெறவுள்ள 2027ஆம் ஆண்டுக்கான உலக இளையோர் ஐஸ் ஹொக்கி சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்ய வீரர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கனேடிய மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tamil Business Directory

ஏற்கனவே செல்லுபடியாகும் கனேடிய விசாக்களைக் கொண்டுள்ள ரஷ்ய வீரர்களுக்கும் இந்தத் தடை பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் விளையாட்டுத்துறை இராஜாங்கச் செயலாளர் அடம் வான் கோவெர்டன் (Adam van Koeverden) இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகள், செல்லுபடியாகும் விசாக்களை வைத்திருந்தாலும், போட்டிகளில் பங்கேற்பதற்காக கனடாவிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொருவரின் விண்ணப்பமும் தனித்தனியாக மதிப்பீடு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை ரஷ்ய மற்றும் பெலாரஸ் மக்களுக்கு எதிரானது அல்ல என்றும், சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை அரசியல் பிரச்சாரத்திற்கும் அரசாங்க அங்கீகாரத்திற்கும் பயன்படுத்துவதைத் தடுப்பதே இதன் நோக்கம் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

மேலும், நடுநிலையான தனிப்பட்ட வீரர்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படலாம் என்றாலும், ரஷ்ய தேசிய அணி நடுநிலைக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்படாது எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் வரை கனடாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2026 டிசம்பர் 26 முதல் 2027 ஜனவரி 5 வரை, அல்பேர்டா மாகாணத்தின் எட்மன்டன் மற்றும் ரெட் டியர் நகரங்களில் உலக இளையோர் ஐஸ் ஹொக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.