Reading Time: < 1 minute

டொராண்டோ நகரின் மேயர் தேர்தலில் ஒலிவியா சௌ தனது முதன்மைப் போட்டியாளரான நகர சபை உறுப்பினர் பிராட் பிராட்போர்டை வீழ்த்தி, மீண்டும் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

எளிய மற்றும் நடுத்தர மக்களின் “வாழ்க்கைச் செலவுகளைக் குறைத்தல்” என்ற பிரசார முழக்கத்தை முதன்மையாகக் கொண்டு இவர் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.

ஒலிவியா சௌ பெறப்பட்ட வாக்குகள்: 54.2% (தோராயமாக 5,32,201 வாக்குகள்)

பிராட் பிராட்போர்ட் பெற்ற வாக்குகள்: 41.1% (தோராயமாக 4,04,013 வாக்குகள்)

வாக்குகள் வித்தியாசம்: 1,28,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் ஒலிவியா சௌ மாபெரும் வெற்றி பெற்றுள்ளார்.

“டொராண்டோ மக்கள் தங்கள் முடிவை அறிவித்துவிட்டார்கள். எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள், வாக்களிக்கும் உரிமை இல்லாதவர்கள் என டொராண்டோவைத் தங்கள் இல்லமாகக் கொண்டு உழைக்கும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன் — நானும் உங்களுக்கான மேயர் தான்” என என ஒலிவியா சௌ நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தோல்வியை ஒப்புக் கொண்ட பிராட் பிராட்போர்ட், ஒலிவியா சௌவுக்குத் தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவித்ததுடன், மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும் கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.