Reading Time: < 1 minute

கனடாவின் எட்மண்டன் (Edmonton) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

இன்று காலை 10:30 மணியளவில் க்ரைட்டன் பிளேஸ் தென்மேற்கு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாகக் கிடைத்த தகவலையடுத்து காவல்துறையினர் அங்கு விரைந்தனர்.

சம்பவ இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், அந்த வீதியை பல மணிநேரம் தடுத்து நிறுத்தி தீவிர சோதனை மற்றும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆணும் பெண்ணும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் எட்மண்டன் காவல்துறை தெரிவித்துள்ளது.

இது திட்டமிட்டு நடத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.