Reading Time: < 1 minute

கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் 44 மில்லியன் டொலர் பெறுமதியான ‘கோல்ட் போல்’ ஜாக்பாட் பரிசை வென்று கோடீஸ்வரராகியுள்ளார்.

Tamil Business Directory

ஆனால், தான் அந்தப் பரிசை வென்ற தகவல் இன்னும் அவருக்குத் தெரியவில்லை. சனிக்கிழமை நடைபெற்ற ‘லொட்டோ 6/49’ குலுக்கலிலேயே இந்த 44 மில்லியன் டொலா் ஜாக்பாட் விழுந்துள்ளது.

வெற்றிபெற்ற இந்த லொத்தர் சீட்டு சஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள சாஸ்கடூன் மற்றும் ரெஜினா ஆகிய இரு முக்கிய நகரங்களுக்கும் வெளியேயுள்ள ஒரு பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற எண் 23202513-03 ஆகும். இந்த எண் முழுமையாகத் துல்லியமாகப் பொருந்தினால் மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற நபர் அல்லது நபர்கள் தங்களது பரிசுத் தொகையைக் கோருவதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.