கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் இயங்கி வரும் சட்டவிரோத கஞ்சா கடைகளை ஒடுக்குவதற்காக மாகாண அரசு புதிய சட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 1,800 அனுமதி பெற்ற சட்டபூர்வ கஞ்சா விற்பனையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 19 அன்று அறிவிக்கப்பட்ட இந்த புதிய மாற்றங்களின் மூலம், ‘ஒன்டாரியோ மதுபான மற்றும் சூதாட்ட ஆணைக்குழுவிற்கு’ சட்டவிரோதக் கடைகளில் சோதனை நடத்தவும், சட்டவிரோதப் பொருட்களைப் பறிமுதல் செய்யவும் மற்றும் நிதி அபராதங்களை விதிக்கவும் முழு அதிகாரம் வழங்கப்படவுள்ளது.
கஞ்சா பயன்பாடு சட்டப்பூர்வமாக்கப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும், மாகாணத்தில் உள்ள கஞ்சா விற்பனையில் சுமார் 30 சதவீதம் இன்னமும் சட்டவிரோத விற்பனையாளர்களாலேயே ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என சட்டமா அதிபர் திணைக்கள தரவுகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் சட்டவிரோதக் கடைகளை மூடும் நடவடிக்கைகள் பல அமைப்புகளுக்கு இடையே மாற்றி மாற்றித் தள்ளப்பட்டதாக விற்பனையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒன்டாரியோவின் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும், சட்டப்பூர்வமாக தொழில் செய்வோருக்கு நியாயமான சூழலை உருவாக்கவுமே இப்புதிய நடவடிக்கைகள் முன்மொழியப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் டக் டவுனி தெரிவித்துள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.