கனடாவுக்குள் துப்பாக்கிகள் மற்றும் மெகசின்களை சட்டவிரோதமாகக் கடத்த முயன்றதாக 57 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் கனடா எல்லை சேவைகள் நிறுவனம் (CBSA) அறிக்கை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து கனடாவுக்குத் திரும்பியபோது, நியூ பிரன்ஸ்விக் மாகாணத்தில் உள்ள ரிவர் டி சுட் எல்லை நுழைவுப் பகுதியில் குறித்த நபர் மேலதிக சோதனைக்காகத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த சோதனையின்போது, அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் குழுவினர் இணைந்து வாகனத்தை சோதனையிட்டுள்ளனர்.
நான்கு துப்பாக்கிகள், அதிக கொள்ளளவு கொண்ட 12 தோட்டாக் களஞ்சியங்கள், மேலும் இரண்டு தோட்டாக் களஞ்சியங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கெய்லோன் ஸ்மித் என அடையாளம் காணப்பட்ட குறித்த நபருக்கு கடத்தல் தொடர்பில் ஐந்து குற்றச்சாட்டுகளும், தவறான தகவலை வழங்கியமை தொடர்பில் ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளன.
அவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அடுத்த விசாரணை செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
சுங்கச் சட்டத்தின் கீழ் இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கனடா எல்லை சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.