Reading Time: < 1 minute

கனடாவில் உள்ள வால்மார்ட் கடைக்கு வெளியே நடந்த துப்பாக்கிச் சூட்டில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர்.

Tamil Business Directory

கடந்த நவம்பர் 15 அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. கொல்லப்பட்டவர்கள் ககன்பிரீத் (கேரி) ரஹால் (23) மற்றும் சுக்ஜீத் கவுர் (24) ஆவர்.

இது குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தன்று சர்ரேயில் உள்ள 88வது அவென்யூ மற்றும் 124வது தெருவிற்கு அருகிலுள்ள வால்மார்ட் வாகன நிறுத்துமிடத்தில் இரவு 10:38 மணிக்கு இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்தது.

குண்டடிபட்ட இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இருவரும் டெல்டா டவுன்ஷிப்பைச் சேர்ந்தவர்கள் ஆவர். துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, அருகிலுள்ள பிரின்சஸ் டிரைவில் எரிந்த நிலையில் ஒரு கார் கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த விசாரணையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இரவு 10:51 மணிக்கு எரிந்து கொண்டிருந்த வாகனம் குறித்த தகவல் காவல்துறைக்குக் கிடைத்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய வாகனமாக அது இருக்கலாம் என்று விசாரணைக் குழு முடிவு செய்துள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.