ஒன்ராறியோ மாகாணத்தின் கிரேட்டர் சட்பரி பகுதியில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு இடையூறு விளைவித்ததாக இரண்டு காவல்துறை அதிகாரிகள் உட்பட மூவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2025 மே 23ஆம் திகதி லைவ்லி பகுதியில் உள்ள குடியிருப்பொன்றில் பணியாற்றிக்கொண்டிருந்த ரோக்கோ ரெனாட் (Rocco Renaud), கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் உயிரிழந்தார்.
இந்த மரணம் தொடர்பாக கிரேட்டர் சட்பரி காவல்துறை சார்ஜென்ட் ஜேசன் போனிஷ் (Jason Bonish), கான்ஸ்டபிள் அலெக்ஸ் பாலோவே (Alex Balloway) மற்றும் 46 வயதான கிறிஸ் பெர்குசன் (Kris Ferguson) ஆகியோர் மீது நீதிக்கு இடையூறு விளைவித்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை (OPP) குற்றம் சாட்டியுள்ளது.
ஏற்கனவே இந்த மரணம் தொடர்பாக இரண்டு நபர்கள் மற்றும் ஒரு நிறுவனம் மீது கவனக்குறைவால் மரணம் விளைவித்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போது குற்றம் சாட்டப்பட்ட மூவரும் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 2027 ஜனவரி 6ஆம் திகதி சட்பரி நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் தொடர்கின்றன. குற்றச்சாட்டுகள் இதுவரை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.