Reading Time: < 1 minute

கனடாவின் ஜார்ஜியன் பே பகுதியில் படகு ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tamil Business Directory

இச்சம்பவம் குறித்து மாகாணக் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சனிக்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில், பிராங்க்ளின் தீவுக்கு வடக்கே உள்ள ஜார்ஜியன் பே நீர்நிலைப் பகுதியில் படகு கவிழ்ந்துள்ளதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்டாரியோ மாகாணக் காவல் துறை (OPP), கூட்டு மீட்பு ஒருங்கிணைப்பு மையம், கார்லிங் தீயணைப்புத் துறை மற்றும் கில்பேர் மெரினா குழுவினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கவிழ்ந்த படகிற்குள் இருந்து முதியவரின் உடலைக் காவல்துறையினர் மீட்டனர்.

அவர் அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 67 வயது நபர் என்பதும், படகில் அவர் ஒருவர் மட்டுமே பயணித்துள்ளார் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான படகு நீரிலிருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. முதியவரின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.