Reading Time: < 1 minute

கனடாவில் இயங்கி வரும் நிறுவனங்களில் ‘தரவு கசிவு’ சம்பவங்களால் ஏற்படும் நிதி இழப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக பிரபல தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

கனடாவில் ஒரு தரவு கசிவு சம்பவத்திற்கு நிறுவனங்கள் சராசரியாக 7.11 மில்லியன் கனடிய டொலர் செலவிட வேண்டியுள்ளது.

இது கடந்த 2025-ஆம் ஆண்டில் 6.98 மில்லியன் டொலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஒரு தரவு கசிவின் மூலம் சராசரியாக 28,500 நபர்களின் தரவுகள் களவாடப்பட்டுள்ளன.

ஒரு கசிவைக் கண்டறிந்து சரி செய்ய சராசரியாக 205 நாட்கள் ஆகின்றன. ரொஜர்ஸ் (Rogers), ஃபைடோ (Fido), டெலஸ் டிஜிட்டல் (Telus Digital), லோப்லா (Loblaw), கனடா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஆர்டீன் போன்ற முன்னணி நிறுவனங்கள் இந்த ஆண்டில் தரவு கசிவால் பாதிக்கப்பட்டுள்ளன.

மிச்சிகனைச் சேர்ந்த ‘பொனெமன் இன்ஸ்டிடியூட்’ என்ற சுயாதீன ஆராய்ச்சி நிறுவனம் மூலம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், உலகளவில் மார்ச் 2025 முதல் பெப்ரவரி 2026 வரை தரவு கசிவை எதிர்கொண்ட 602 நிறுவனங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.