கனடாவின் டொராண்டோ நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் கடுமையான உடல்நலப் பாதிப்பிலும் குடும்ப உறுப்பினர்களின் இழப்பிலும் தவித்த தருணத்தைப் பயன்படுத்தி, ஜோதிடர் ஒருவர் தன்னிடம் இருந்து சுமார் 96,000 டாலர்களை ஏமாற்றிவிட்டதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்தப் பெண், தன்னை ‘நேன்சி’ என்ற பெயரில் ஊடகத்திடம் தனது துயரத்தைப் பகிர்ந்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடுமையான இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்த நேன்சி, அதே காலகட்டத்தில் தனது தந்தை மற்றும் சகோதரரை அடுத்தடுத்து இழந்தார்.
இதனால் கடும் மன உளைச்சலில் இருந்தபோது, இன்ஸ்டாகிராமில் வெறும் 30 கட்டணத்தில் ஜோதிடம் பார்க்கப்படும் என்ற விளம்பரத்தைப் பார்த்து அந்த ஜோதிடரை அணுகியுள்ளார்.
ஜோதிடத்தைச் சந்தித்தபோது, நேன்சியைச் சுற்றிப் பொல்லாத ஆவிகளும், கடுமையான பில்லி சூனியமும் இருப்பதாக அச்சமூட்டப்பட்டுள்ளது.
இந்தச் சூனியத்தினால் விரைவில் நீங்கள் முடங்கி, சக்கர நாற்காலியில் அமர நேரிடும்; இறுதியில் உயிரிழப்பீர்கள்” என்று ஜோதிடர் அச்சுறுத்தியுள்ளார்.
ஒரு துர்சக்தியை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து ஏரியில் புதைக்க 25,000 டொலர் வேண்டும் எனக் கேட்டுப் பெற்றுள்ளார்.
அதன் பின்னர் மேலும் 7 துர்சக்திகள் இருப்பதாகக் கூறி, சிறுகச் சிறுக நேன்சியின் வாழ்நாள் சேமிப்பான மொத்தம் 96,000 டெலாலர்களை பறித்துள்ளார்.
தனது சேமிப்பு முழுவதையும் கொடுத்த பிறகும் நேன்சியின் உடல்நலத்திலோ பிரச்சினைகளிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
“இறுதியில் எதுவுமே நடக்கவில்லை. நான் மிகப்பெரிய முட்டாள்தனம் செய்துவிட்டேன். தினமும் அழுதுகொண்டிருக்கிறேன்” என நேன்சி கதறியுள்ளார்.
இத்தகைய ஜோதிட மோசடிகள் பயம், அச்சுறுத்தல் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான சூழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டவை என கனடா மோசடி எதிர்ப்பு மையம் எச்சரித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.