கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள கவர்தா லேக்ஸ் பகுதிக்குத் தனது சிறிய, சொந்தமாக தயாரிக்கப்பட்ட விமானத்தில் சென்று காணாமல் போன விமானியின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாணக் காவலத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின்னர், வுல்ஃப் ஏரியில் மூழ்கிய நிலையில் அந்தச் சிறிய விமானத்தைக் கண்டறிந்த மீட்புக் குழுவினர், அதிலிருந்த விமானி உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.
ஆரம்பத்தில் விமானம் காணாமல் போனதாகப் புகாரளிக்கப்பட்ட நிலையில், அதை இயக்கிச் சென்றவர் டேவிட் டக்ளஸ் என்ற முதியவர் என்பதை அவரது குடும்பத்தினர் அடையாளம் காட்டினர்.
கடந்த வார இறுதியில் ஒஷாவா எக்சிகியூட்டிவ் விமான நிலையத்திலிருந்து வடக்கு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற அவர், அதன்பின் திரும்பவில்லை.
ஞாயிற்றுக்கிழமையன்று வுல்ஃப் ஏரியில் விமானத்தின் உடைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும், விமானியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
பல தேடுதல் மற்றும் மீட்பு முகமைகள், காவல்துறையினர் இணைந்து இந்த தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். தற்போது ஏரியிலிருந்து விமானத்தையும் உடலையும் வெளியே எடுப்பதற்கான திட்டங்களை அதிகாரிகள் ஒருங்கிணைத்து வருகின்றனர். இந்த விபத்துக்கான பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து விசாரணை நடத்த கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் நடவடிக்கை எடுத்து வருவதாக ஒன்ராறியோ காவலத்துறை தெரிவித்துள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.