அமெரிக்க இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, கனடாவின் ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் வரி விதிப்புக் கொள்கைகளால் ஒன்டாரியோவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தேர்தல் முடிவுகள் அவருக்கு விடுக்கப்பட்ட ஒரு வலுவான எச்சரிக்கையாக அமைந்திருப்பதாக ஃபோர்ட் குறிப்பிட்டுள்ளார்.
முடிவுகள் வெளிவந்தபோது நான் மகிழ்ச்சியில் குதித்துக்கொண்டிருந்தேன். அமெரிக்க மக்கள் சரியான பதிலை வழங்கியுள்ளனர் என ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
வாழ்க்கைக் செலவினங்கள், எரிபொருள் விலை, ஈரான் போர் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக வாழ்க்கைக் செலவை அதிகரிக்கும் இறக்குமதி வரிகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே மக்கள் தமது வாக்கைப் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர் அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டையும் கைப்பற்றியுள்ளமை குறித்துத் தெரிவிக்கையில், “ட்ரம்ப் மற்றவர்களைக் குற்றம் சாட்டுவதை நிறுத்திவிட்டு, தேர்தல் முடிவுகளுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.