அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பேர்பீல்டு (Fairfield) நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 31 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹாலோவீன் பண்டிகைக்கான ஆடைகள் விற்பனை செய்யப்படும் கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த வேளையில், மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், சிறுவன் உட்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டை நடத்திய சந்தேகநபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியோடிய சந்தேகநபரைக் கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.