Reading Time: < 1 minute

கனடாவின் வடகிழக்கு கால்கரியில் உள்ள ஒரு வணிக வளாகத்தின் பார்க்கிங் பகுதியில் வாகனம் மோதியதில் இரண்டு வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

Tamil Business Directory

இந்த விபத்து, 36 ஸ்ட்ரீட் என்.இ. பகுதியில் உள்ள சன்ரிட்ஜ் மாலின் வின்னர்ஸ் கடைக்கு அருகில் உள்ள பார்க்கிங் பகுதியில் நடந்துள்ளது.

தந்தையின் பிடியில் இருந்து குழந்தை விலகி ஓடியபோது எதிராராதவிதமாக வாகனம் மோதி விபத்துக்குள்ளானதாக கால்கரி காவல் துறை தெரிவித்துள்ளது.

உடனடியாக குழந்தை பீட்டர் லாகீட் சென்டர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே காத்திருந்த நிலையில், போக்குவரத்துப் பிரிவு காவல்துறையினர் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

Comments are closed, but trackbacks and pingbacks are open.