Reading Time: < 1 minute

நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அரசியலில் கனடா தலையிடக்கூடும் என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் எந்தவிதமான அடிப்படையும் இல்லை என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரிகள், கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் பீட் ஹோக்ஸ்ட்ரா உள்ளிட்டோர், அமெரிக்காவின் ஜனநாயகச் செயற்பாட்டில் கனேடிய அரசியல்வாதிகள் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு கனேடிய அரசியல்வாதிகளின் நடவடிக்கைகளைத் தமது நிர்வாகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கத் தூதுவர், அமெரிக்க அரசியலில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து மறுத்து வரும் மார்க் கார்னி, இன்று துருக்கியில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில், அமெரிக்கத் தூதுவர் இத்தகைய குற்றச்சாட்டுகளைப் பரப்புவது ஏமாற்றமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக நிலவும் அதிகரித்த உணர்வுபூர்வமான சூழலைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கத் தேர்தல் வேட்பாளர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் பங்கேற்கும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவோ வேண்டாம் என கனேடிய இராஜதந்திரிகளுக்கு இந்த வாரம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் கனடா ஆழமான இராஜதந்திர உறவுகளைக் கொண்டிருந்தாலும், அந்நாட்டின் தேர்தல் செயற்பாடுகளில் தலையிடுவதாகத் தோன்றும் சூழல்கூட உருவாகாமல் இருக்கக் கனடா கவனமாகச் செயல்படுவதாகப் பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.