Reading Time: < 1 minute

கனடாவில் வெளிநாட்டு ஓட்டுநர் உரிமங்களை உள்ளூர் சாலைத் தேர்வின்றி மாற்றிக்கொள்ளும் நடைமுறை குறித்து சாலைப் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் எழுந்துள்ளன.

Tamil Business Directory

ஒன்ராறியோவில் அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளின் ஓட்டுநர் உரிமங்களை, குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் சாலைத் தேர்வின்றி மாற்றிக்கொள்ள முடியும்.

எனினும், உரிமப் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்கள் உள்ளூர் ஓட்டுநர் தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

2026 ஜூலை 1 முதல் அமுலுக்கு வந்த புதிய விதிகளின்படி, இத்தகைய வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அதிகபட்சமாக 12 மாத ஓட்டுநர் அனுபவம் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும், G2 மற்றும் G சாலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக Highway 401 போன்ற பரபரப்பான நெடுஞ்சாலைகள், கடுமையான பனிப்பொழிவு மற்றும் மாறுபட்ட காலநிலைகளில் வாகனம் ஓட்டுவதற்கு உள்ளூர் அனுபவம் அவசியம் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.