Reading Time: < 1 minute

கனடாவின் நியூ பிரன்ஸ்விக் மாகாணம், மொன்க்டனில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பெட்டிட்கோடியக் ஆற்றில் பாய்ந்த விபத்தில் 67 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

Tamil Business Directory

பிரின்ஸ் எட்வர்ட் தீவு மாகாணத்தின் ஸ்ட்ராட்ஃபோர்டைச் சேர்ந்த அந்த நபர், வெள்ளிக்கிழமை காலை இந்த விபத்தில் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அசாம்ப்ஷன் புலிவார்டு அருகே ஆற்றில் வாகனம் ஒன்று விழுந்திருப்பதாக காலை 9.25 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நியூ பிரன்ஸ்விக் மாகாண காவல்துறையினரும் அவசரகால மீட்புப் படையினரும் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.

விசாரணையின் ஆரம்பக் கட்ட தகவலின்படி, ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும், அந்த வாகனம் மேலும் இரண்டு வாகனங்களுடன் மோதிய பின்னர் ஆற்றுக்குள் பாய்ந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தில் அந்த 67 வயது நபர் மட்டுமே இருந்ததாகவும், விபத்தில் ஏற்பட்ட காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் காவல்துறை கூறியுள்ளது.

அவரது மரணத்திற்கான துல்லியமான காரணத்தை உறுதி செய்வதற்காக உடற்கூராய்வு நடத்தப்பட உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.