ரொறன்ரோவில் 2026 ஆம் ஆண்டுக்கான ஆகஸ்ட் மாத சிவிக் விடுமுறை எதிர்வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்படுகிறது.
கோடைக்காலத்தின் நடுப்பகுதியில் கிடைக்கும் இந்த விடுமுறை நாளில் பெரும்பாலான சில்லறை விற்பனை நிலையங்கள், வணிக வளாகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் வழக்கம்போல் இயங்கவுள்ளன. எனினும், வங்கிகள், அரச அலுவலகங்கள் மற்றும் நூலகங்கள் உட்பட சில முக்கிய சேவைகள் மூடப்பட்டிருக்கும்.
ஆகஸ்ட் சிவிக் விடுமுறை நாளில் ரொறன்ரோவில் திறந்திருக்கும் மற்றும் மூடப்பட்டிருக்கும் இடங்களின் விபரம் வருமாறு:
பொதுச் சேவைகள்
மூடப்பட்டிருப்பவை
- வங்கிகள்
- அரச அலுவலகங்கள்
- பொது நூலகங்கள்
- கனடா போஸ்ட் அஞ்சல் விநியோகம்
இயங்கும் சேவைகள்
- TTC போக்குவரத்து சேவை விடுமுறை நாள் அட்டவணைப்படி இயங்கும்.
- GO Transit சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும்.
- பெரும்பாலான Shoppers Drug Mart மற்றும் Rexall மருந்தகங்கள் திறந்திருக்கும்.
உணவகங்கள் மற்றும் மளிகைக் கடைகள்
பல மளிகைக் கடைகள் விடுமுறை நேர அட்டவணையுடன் திறந்திருக்கும். எனினும், சில உணவகங்கள் மற்றும் தனியார் வர்த்தக நிலையங்கள் விடுமுறை காரணமாக மூடப்பட்டிருக்கலாம். செல்லும் முன் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு அல்லது இணையதளத்தில் நேரத்தை உறுதிப்படுத்துவது நல்லது.
திறந்திருக்கும் முக்கிய மளிகைக் கடைகள்
- Al Premium, 1970 Eglinton Avenue East – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Al Premium, 250 Alton Towers Circle – காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
- Costco – அனைத்து கிளைகளும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை
- Eataly Don Mills, 49 Karl Fraser Road – காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை
- Eataly Sherway Gardens, 25 The West Mall – காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை
- Eataly Yorkville, 55 Bloor Street West – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Galleria Supermarket, 4950 Yonge Street – காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
- Galleria Supermarket, 558 Yonge Street – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Galleria Supermarket, 2293 Yonge Street – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Iqbal Foods, 107 Parkway Forest Drive – காலை 7 மணி முதல் அதிகாலை 1 மணி வரை
- Iqbal Foods, 462 Birchmount Road – காலை 8.30 மணி முதல் இரவு 11 மணி வரை
- Pusateri’s, 1539 Avenue Road – காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை
- Summerhill Market – அனைத்து கிளைகளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை
- The Kitchen Table, 389 Spadina Road – காலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை
- The Kitchen Table, 705 King Street West – காலை 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை
- Rabba – அனைத்து கிளைகளும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்
- T&T Supermarket – கிளைகளைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும்
- Wine Rack – கிளைகளைப் பொறுத்து நேரங்கள் மாறுபடும்
Farm Boy கிளைகள்
- Alderwood, 841 Brown’s Line – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
- Aukland, 5245 Dundas Street West – காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
- College and Bay, 777 Bay Street – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
- Dupont, 744 Dupont Street – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
- Front and Bathurst, 29 Bathurst Street – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Harbourfront, 207 Queens Quay West – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Leaside, 147 Laird Drive – காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை
- Leslieville, 1005 Lake Shore Boulevard East – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
- St. Clair, 81 St. Clair Avenue East – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
- Sugar Wharf, 100 Queens Quay East – காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
- Yonge and Soudan, 2149 Yonge Street – காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
மதுபான விற்பனை நிலையங்கள்
- Beer Store கிளைகள் குறைக்கப்பட்ட நேரத்தில் திறந்திருக்கும்.
- LCBO கிளைகள் குறைக்கப்பட்ட நேரத்தில் இயங்கும்.
- Wine Rack கிளைகளின் நேரங்கள் இடத்திற்கேற்ப மாறுபடும்.
வணிக வளாகங்கள்
ஆகஸ்ட் சிவிக் விடுமுறையில் ரொறன்ரோ மற்றும் பெரும் ரொறன்ரோ பகுதிகளில் உள்ள பல முக்கிய வணிக வளாகங்கள் திறந்திருக்கும்.
- CF Fairview Mall – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
- CF Markville – காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
- CF Shops at Don Mills – காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
- CF Sherway Gardens – காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
- CF Toronto Eaton Centre – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
- Dufferin Mall – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
- Pacific Mall – காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை
- Scarborough Town Centre – காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
- Yorkdale Shopping Centre – காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை
சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள்
மூடப்பட்டிருப்பவை
- Museum of Contemporary Art – MOCA
- St. Lawrence Market
திறந்திருப்பவை
- Aga Khan Museum – காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை
- Arcadia Earth – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
- Bata Shoe Museum – காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை
- Art Gallery of Ontario – AGO – காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை
- Canada’s Wonderland – காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
- Casa Loma – காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை
- CN Tower – காலை 9 மணி முதல் இரவு 9.30 மணி வரை
- Distillery District – காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை
- Gardiner Museum – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
- Hockey Hall of Fame – காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
- Little Canada – காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
- Ripley’s Aquarium of Canada – காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
- Royal Ontario Museum – காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை
- Toronto Zoo – காலை 9.30 மணி முதல் மாலை 7 மணி வரை
- The Well – காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை
- திரைப்படத் திரையரங்குகள் வழக்கம்போல் இயங்கும்.
The Well வளாகத்திலுள்ள தனிப்பட்ட கடைகள் மற்றும் உணவகங்களின் செயல்பாட்டு நேரங்கள் மாறுபடக்கூடும்.
விடுமுறை நாளில் நிறுவனங்களின் செயல்பாட்டு நேரங்களில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்படக்கூடும் என்பதால், வெளியே செல்லும் முன் சம்பந்தப்பட்ட கடை, உணவகம் அல்லது சுற்றுலாத் தலத்தின் இணையதளத்தில் நேரத்தை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.





Comments are closed, but trackbacks and pingbacks are open.