Reading Time: < 1 minute

கனடாவின் பிரம்டனில் இடம்பெற்ற விபத்ததில் ஓருவர் கொல்லப்பட்டுள்ளார். பிராம்ப்டனில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் மூன்று வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளாகின.

Tamil Business Directory

இந்தச் சம்பவத்தில் ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஒன்ராறியோ மாகாண காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை; இது தொடர்பான விசாரணைகளை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

விசாரணையைத் தொடர்ந்து பல மணி நேரம் மூடப்பட்டிருந்த அப்பகுதியின் சாலைகள் தற்போது மீண்டும் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளன.

Comments are closed, but trackbacks and pingbacks are open.