கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன் நகரில் வணிகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தைத் தொடர்ந்து, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 30) காலை, பிராம்ப்டனின் ஹம்பர்வெஸ்ட் பார்க்வே (Humberwest Parkway) மற்றும் வில்லியம்ஸ் பார்க்வே (Williams Parkway) ஆகிய வீதிகளுக்கு அருகாமையில் உள்ள 70 Ward Road முகவரியில் அமைந்துள்ள வணிகக் கட்டிடத்திலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்ததும் பிராம்ப்டன் தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணிகளை முன்னெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.
மேலும், தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் கட்டிடத்திற்கு ஏற்பட்டுள்ள சேதங்களின் மதிப்பு குறித்தும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தீ விபத்துக்கான காரணம் தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்த விபரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.





Comments are closed, but trackbacks and pingbacks are open.